இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது பாளையக்காரர்கள் என்றால் அது மிகையல்ல. வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த பாளையக்காரர்களின் இரத்தத்தில் வீரம் என்ற எதிர்ப்பு சக்தி 'வெள்ளை அணு' சற்று அதிகமாகவே இருந்தது எனலாம்.