வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

பொடுகு நீங்க இயற்கையின் வரப்பிரசாதம் பொடுதலை!!!!

பொடுகு நீங்க இயற்கையின் வரப்பிரசாதம் பொடுதலை!!!!

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

 
பொடுகு நீங்க எண்ணெய் தயாரிக்கும் முறை: 
 
முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும்.  பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு சிறு தீயில் காய்ச்சி நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
 
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
 
இதற்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடுதலை என பல பெயர்ககளும் உண்டு.