நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்

Sasikala|
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கேழ்வரகில் இரும்புச் சத்தும்,  சுண்ணாம்புச் சத்தும் போதிய அளவு உள்ளது.

 
வேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிட உடம்பில் உள்ள கிருமிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். பித்தம் குறையும்.
 
வெந்தயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர உஷ்ணம் குறைந்துவிடும். வெந்தயம் நீரிழிவு நோய்க்கு சிறந்த  மருந்து.
 
அன்னாசிபழம் சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
 
முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களையும் விரட்டும். விலையும் மிகக் குறைவு.
 
மாரடைப்பை தடுக்க, இதய நோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வர மாரடைப்பை தடுக்கலாம்.
 
குழந்தைகளின் அஜீரணத்தை குணப்படுத்த, ஒரு மேஜைக் கரண்டி ஓமத்தை எடுத்து வெறும் வாணலியில் அதை வெடிக்கவிட்டு  ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதித்து சிறிது வற்றியதும் எடுத்து அதனைத் தேன் கல்ந்து மூன்று வேளை  உட்கொள்ளச் செய்யலாம்.
 
குழந்தைகளின் அஜீரணத்தை போக்க மிளகு அரை தேக்கரண்டி உப்பு அரைத் தேக்கரண்டி, இந்த இரண்டையும் மைபோல  அரைத்து, ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கலந்து வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு தேனுடன் கலந்து அருந்தி வர குழந்தைகளின் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
 
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூலநோய், ஆசனக் கடுப்பு யாவும் குணமாகும்.
 
ஓமம், உப்பு, கிராம்பு சேர்த்து மென்று நீரை விழுங்கினால் சளி, கபம், இருமல் கரையும். சமையலில் பகோடா, பஜ்ஜி, பூரி  செய்ய மாவுடன் ஓமத்தை சேர்த்துப் பிசைந்தால் மணமே அலாதி. ஜீரணமும் தரும்.


இதில் மேலும் படிக்கவும் :