Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்...!

Widgets Magazine

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலையை பயன்படுத்தலாம். கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று  ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.

 
‪‎கரப்பான் பூச்சி
 
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் மிளகுத் தூள்,  வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்..
 
‪மூட்டைப்பூச்சி
 
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், அதன்  வாசனையில் மூட்டைப்பூச்சிகள் அழிந்து விடும். கடைகளில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை  விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே, அவற்றை எளிதில் விரட்டலாம்.
 
எலி
 
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே, புதினாவை அது வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா  எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
 
‪பல்லி
 
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில், வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை  வையுங்கள். அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும். அல்லது நாப்தலின் உருண்டைகள், சிறந்த பூச்சிக் கொல்லிகள்,  உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த  முறை இது.
 
‪ஈ
 
சில வீடுகளில் “ஈக்கள்” அதிகம் மொய்க்கும்.. அப்படி உங்கள் வீட்டில் “ஈக்கள்” அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால், லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து  விடுங்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இரவு ஷிப்ட் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது இரவு ஷிப்ட்களில்தான் பணிபுரிகின்றனர். குரிப்பாக ஐடி ...

news

மொபைல் போனுக்கும் சர்க்கரை நோயுக்கும் என்ன சம்மந்தம்? திடுக்கிட வைக்கும் ஆய்வு

பொதுவாக நீரிழிவு நோய் என்று கூறப்படும் சர்க்கரை நோய் பரம்பரையாகவும், சரியான உணவு ...

news

இதயத்தை இதமாக வைத்து கொள்ள வேண்டுமா? இவற்றை பின்பற்றுங்கள்

மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதயம் நின்றுவிட்டால் அவ்வளவுதான். மேலும் ...

news

நல்ல தூக்கம் பெற ஐந்து வழிகள்

ஒரு மனிதனுக்கு உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் தூக்கம். தூக்கம் ...

Widgets Magazine Widgets Magazine