வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

ஹார்மோன்கள் மட்டும் முகப்பரு பிரச்சனைக்கு காரணமா?

இன்றைய இளஞர்களின் தலையாய பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது இந்த முகப்பரு. பல மாணவ மானவிகளின் மன உளைச்சலுக்கு காரனமாக இருப்பது இந்த முகப்பரு என்றால் அது மிகையாகாது.
 

 
காரணம் என்ன?
 
இந்த முகப் பருக்களுக்கு என்னதான் காரணமாக இருக்க முடியும் என்று பார்த்தால் அது ஹார்மோன்களின் மாற்றங்கள் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. வயிற்றில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் மற்றும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, உணவு பழக்கம் சரியாக, முறையாக இல்லாதது போன்ற காரணங்களாகும்!
 
மேலும் இந்த பருக்கள் எண்ணெய் பசை தன்மை கொண்ட முகங்களையே அதிகமாக பாதிக்கின்றன. கைகளால் கிள்ளிவிட்டால் அது முகத்தில் வடுக்களாக மாறிவிடுகின்றன. செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு பருக்கள் அதிகமாக இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் தோலில் தேங்கி விடுவதால் இந்த பிரச்சனை தோன்றிவிடுகிறது.
 
வேறு சில காரணங்களாலும் இந்த முகப்பருக்கள் தோன்றுகின்றன. அதிகப்படியான டீ, காபி, ஆல்கஹால், சிகரெட் போன்ற தீயபழக்க வழக்கங்களாலும் இது தோன்றுகிறது.
 
சரி செய்வது எப்படி?
 
முகப்பருக்களை எளிதில் சரி செய்து கொள்ள முடியும் தகுந்த மருத்துவம் எடுத்துக் கொள்வது அவசியம். மூலகாரனம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டால் எளிதில் சரியாகிவிடும்.
 
முக்கியமாக உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறான உணவு பழக்கம் கூடாவே கூடாது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், சர்க்கரை, எண்ணெய் பொருட்கள் ஆகவே ஆகாது.
 
மைதா, பாட்டிலில் அடத்து வைத்து விற்கும் உணவுகள், குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் தவிர்த்து மற்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியம் முக்கியமாக திராட்சை, மாதுளை, அன்னாசி!
 
எலுமிச்சை சாறு சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. புல்லின் மீது படிந்திருக்கும் பனித்துளிகளை சேகரித்து இந்த பருக்களின் மீது போடுவதால் மறைந்துவிடும் என்று பாட்டி வைத்தியம் கூறுவதுண்டு.
 
நாகரிக உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை சேர்த்துக் கொண்டு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறும்போது இந்த முகப்பரு முற்றிலும் மறைந்து விடும்!

அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி