வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Murugan
Last Modified: திங்கள், 13 ஜூன் 2016 (17:30 IST)

சில முக்கிய மருத்துவ டிப்ஸ்

கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.


 

 
வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
 
பொன்மேனி தரும் குப்பைமேனி: குப்பை மேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர குணமாகும்.
 
தேள்கடியை விரட்டும் குடியோட்டிப்பூண்டு: பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். வயிற்றுவலி போக்கும் நறுவி நறுவிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப்பால் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
 
காற்று சுத்திகரிப்பான் சர்க்கரை: சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக் காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
 
தலைபாரம் நீக்கும் கிராம்பு: கிராம்பை நீர்விட்டு மை போல் அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.
 
காயத்துக்கு காட்டாமணக்கு: காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப்பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
 
உப்பலுக்கு உப்பிலாங்கொடி: மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணப்பட்டால், உப்பிலாங்கொடியை அரைஞானில் கட்டத் தீரும்.
 
மயக்கத்துக்கு ஏலம்: ஏலக்காய் 1 பங்கு, யக்கம் நீங்கும். பனைவெல்லம் 1/2 பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
 
படர் தாமரைக்கு: அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.
 
பல் ஈறு, வீக்கம் வக்கு: கிராம்பு, கற்பூரம், ஒமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து கிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
 
மலச்சிக்கலுக்கு: பிஞ்சுகடுக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், எடுத்து தட்டி 1 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும் பொழுது குடித்துவிட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.