வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (15:57 IST)

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் கஹானி

வித்யாபாலன் நடிப்பில் சுஜாய் கோஷ் இயக்கிய கஹானி படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.
 
ஹாலிவுட் படங்களை இந்திய மொழிகளில் (அதிகாரப்பூர்வமில்லாமல்) ரீமேக் செய்து கொண்டிருந்தது மாறி இந்திப் படங்களை ஹாலிவுட் ரீமேக் செய்யும் காலம் கனிந்துள்ளது. நடிகை வித்யாபாலனுக்கு ஹீரோவுக்கு இணையான அந்தஸ்தை பெற்றுத் தந்த கஹானி திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர்.
கஹானியை சுஜாய் கோஷ் இயக்கியிருந்தார். வெளிநாட்டிலிருந்து தனது கணவனைத் தேடி கொல்கத்தா வரும் கர்ப்பிணியான வித்யாபாலனை சுற்றி நடக்கும் கதையிது. கணவனைத் தேடி வந்த வித்யாபாலன் கடைசியில் என்ன செய்கிறார், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது திடுக்கிடும் சஸ்பென்ஸ்.
 
இதனை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் இயக்கி வெளியிட்டார் இயக்குனர் சேகர் கம்மூலா. நயன்தாரா நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை.
 
இந்நிலையில், த கேர்ள் வித் ட்ராகன் டாட்டூஸ் (பிரெஞ்ச் வெர்ஷன்), டெட் மேன் டவுன் படங்களை இயக்கிய Niels Arden Oplev  கஹானியை ஹாலிவுட்டில் ரீமேக் செய்கிறார். ஹாலிவுட்டுக்காக அமெரிக்க பெண் தனது கணவனைத் தேடி இந்தியா வருவதாக கதையை சிறிது மாற்றி உள்ளனர்.