வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (10:31 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

5. The Book of Life
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 9.8 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 29.91 மில்லியன் டாலர்கள்.
 

4. Gone Girl
டேவிட் ஃபின்ஜரின் இந்த த்ரில்லர் சென்ற வார இறுதியில் 11.10 மில்லியன் டாலர்கள் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 124.09 மில்லியன் டாலர்கள்.  

3. Fury 
பிராட் பிட் நடித்துள்ள இந்த போர் பின்னணியில் அமைந்த படம் சென்ற வார இறுதியில் 13 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த யுஎஸ் வசூல் 46.05 மில்லியன் டாலர்கள்.
 

2. John Wick
இரண்டு ஸ்டண்ட்மேன்கள் இணைந்து இயக்கியிருக்கும் படம். இருவருக்கும் இதுதான் இயக்குனராக முதல் படம். கியானு ரீவ்ஸ் நாயகன். ரசிகர்களை கவர்ந்துள்ள இப்படம் முதல் மூன்று தினங்களில் 14.15 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 

1. Ouija
ஹாரர் படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 20.01 மில்லியன் டாலர்கள்.