வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By Webdunia

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

5. Endless Love
FILE

சென்ற வாரம் இப்படம் வெளியானது. ரொமான்டிக் படம். அதனால் காதலர் தினத்தில் படத்தை வெளியிட்டனர். முதல் வார இறுதியில் இதன் வசூல் 13.4 மில்லியன் டாலர்கள்.

4. The Monuments Men

க்ளூனி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் சென்ற வார இறுதியில் 15 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
FILE

இதுவரை இதன் வசூல் 43.7 மில்லியன் டாலர்கள்.

3. RoboCop

இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 21.5 மில்லியன் டாலர்களையே வசூலித்துள்ளது.
FILE

ப்ரிமியர் ஷோ எல்லாம் சேர்த்து 26.4 மில்லியன் டாலர்கள். படத்தின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்கள்.

2. About Last Night

ஸ்டீவ் பிங்க் இயக்கியிருக்கும் ரொமான்டிக் காமெடி. சென்ற வாரம்தான் வெளியானது. முதல் மூன்று தினங்களிலேயே லாபம் சம்பாதித்திருக்கிறது.
FILE

இதன் பட்ஜெட் 12 மில்லியன் டாலர்கள். முதல் மூன்றுநாள் வசூல் 27 மில்லியன் டாலர்கள்.

1. The Lego Movie

அமெரிக்காவில் அனிமேஷன் படங்கள்தான் டாப் ஸ்கோரர். அதனை இந்தப் படமும் நிரூபித்துள்ளது.
FILE

சென்ற வார இறுதியில் 48.8 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப் பிடித்த இப்படம் இதுவரை 129.1 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.