1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By John
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (01:12 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் கேப்டன் அமெரிக்கா

5. The Grand Budapest Hotel

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை தி கிரான்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் பிடித்துள்ளது. லிமிடெட் திரையரங்கில் வெளியாகி அதிக கலெக்ஷனை பெற்றதால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற வார இறுதியில் 6.3 மில்லியன் டாலர்களை தனதாக்கிய இப்படம் ஐந்து வாரங்களில் 33.4 மில்லியன் டாலர்களை கலெக்ஷன் செய்துள்ளது.

4. God's Not Dead

God's Not Dead
விமர்சகர்கள் கழுவி ஊற்றும் இப்படம் மூன்று வாரங்களாக பாக்ஸ் ஆபிஸ் டாப் 10-க்குள் இருப்பது அதிசயம்தான். சென்ற வாரம் 7.7 மில்லியன் டாலர்களை தனதாக்கிய இப்படம் இதுவரை பெற்றிருப்பது 32.5 மில்லியன் டாலர்கள்.

3. Divergent

Divergent
வெளியான முதல் வாரத்தில் முதலிடம் பிடித்த படம் 3-வது வாரத்தில் 3-வது இடத்துக்கு வந்துள்ளது. இதன் சென்ற வார கலெக்ஷன் 13 மில்லியன் டாலர்கள். இதுவரை 114 மில்லியன் டாலர்கள்.

2. Noah

Noah
முதல் வாரம் அமர்க்களமான கலெக்ஷனைப் பெற்றாலும் அடுத்தடுத்த நாள்களில் நோவா கலெக்ஷன் குறைய ஆரம்பித்தது. சென்ற வார இறுதியில் 17 மில்லியன் டாலர்களை மட்டுமே பெற்றுள்ளது. இரண்டு வாரங்களில் கலெக்ஷன் 72.3 மில்லியன் டாலர்கள்.

1. Captain America: The Winter Soldier
Captain America: The Winter Soldier
இந்த வருட யுஎஸ் கோடை பாக்ஸ் ஆபிஸில் பொழிந்திருக்கும் கோடை மழை கேப்டன் அமெரிக்கா. 2011 ல் வெளியான படம் சொதப்பினாலும் இந்தப் படம் ரசிகர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்துள்ளது. படத்தின் பட்ஜெட் 170 மில்லியன் டாலர்கள். இதன் முதல் மூன்று தின வசூல் 96.2 மில்லியன் டாலர்கள்.