1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Geetha Priya
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2014 (13:49 IST)

பைரஸியால் ப்ளாப்பான ஸ்டாலோன் படம்

பைரஸி தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்லை, காப்பி ரைட்ஸ் கறாராக கடைப்பிடிக்கப்படும் ஹாலிவுட்டிலும் பெரிய தலைவலிதான். பைரஸி காரணமாக சில்வஸ்டர் ஸ்டாலோனின் த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 16.2 மில்லியன் டாலர்களையே வசூலித்தது. ஆக்ஷன் ஹீரோக்கள் அணிதிரண்ட படத்துக்கு இவ்வளவு குறைவான வசூலா? ஆச்சரியக் குரல்கள் யுஎஸ் முழுக்க கேட்கிறது.
 
இதற்கு ஸ்டுடியோ தரப்பில் காரணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு 3 வாரங்கள் முன்பே இணையத்தில் த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 வெளியானது. அதனை 2.2 மில்லியன் ஆட்கள் பார்த்துள்ளனர். அதாவது இருபது லட்சத்துக்கும் அதிகமானோர்.
 
2010 -ல் முதல் பாகம் வெளியான போது முதல் மூன்று தினங்களில் 34.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது. 2012 -ல் வெளியான இரண்டாவது பாகம் 28.6 மில்லியன் டாலர்கள். மூன்றாவது பாகமோ வெறும் 16.2 மில்லியன் டாலர்கள்.
 
இணையத்தில் படம் வெளியானதும், படம் சரியில்லை என்ற வாய்மொழி விமர்சனங்களும் படத்தை மிகப்பெரிய தோல்விப் படமாக்கியுள்ளது.
 
ஸ்டாலோன் இனியும் நான்காவது பாகம் குறித்து யோசிப்பார் என்று நினைக்கிறீர்கள்?