செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2014 (15:25 IST)

சுதந்திர தினத்தில் அணிவகுக்கும் ஆக்சன் ஹீரோக்கள்

ஹாலிவுட்டின் டாப் மசில்மேன் சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு திடீரென்று ஓர் எண்ணம். எண்பது தொண்ணூறுகளில் தானும் தன்னுடைய சகா அர்னால்ட் ஸ்வாஸ்நெகரும் கலக்கிய பி கிரேட் ஆக்சன் படத்தை மீண்டும் எடுத்தால் என்ன? அன்று தனித்தனியாக நடித்த அத்தனை பேரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். தங்களின் வாரிசாக இப்போது ஹாலிவுட்டில் ஆக்சன்மேளா நடத்திக் கொண்டிருக்கும் ஜுனியர்களையும் கூட்டணியில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு மசில்மேன்கள் அனைவரும் ஓ போட, தி எக்ஸ்பென்டபிள்ஸ் உருவானது. ஸ்டாலோன்தான் படத்தை இயக்கினார்.
 
முதல் பாகத்தின் பல பலவீனங்களில் ஸ்டாலோனின் இயக்கமும் ஒன்று என்பது கண்டறியப்பட்டது. ஆகவே இரண்டாவது பாகத்தில் கான் ஏர் போன்ற அதிரடி படங்களை இயக்கிய சைமன் வெஸ்டை கொண்டு வந்தனர். இரண்டாவது பாகம் முதலாவதைவிட ஹிட். 
 

வரும் ஆகஸ்ட் 15 மூன்றாவது பாகம் வெளியாகிறது. முதலிரு பாகங்களிலும் நடித்த ப்ரூஸ் வில்லிஸ் மூன்றாவது பாகத்தில் நடிக்க கேட்ட சம்பளம் ஸ்டாலோனை உறுத்தியது. ஒரேயொரு மில்லியன் டாலருக்காக வில்லிஸ் முறைத்துக் கொள்ள, அவர் இல்லைன்னா வேற ஆள் என்று ஹாரிசன் போர்டை ஒப்பந்தம் செய்தார்கள். கூடவே மெல் கிப்ஸன். ஹாரிசன் போர்டுக்கு வயசு 72. 
ஸ்டாலோன், அர்னால்ட், ஸ்டெதம், ஜெட் லீ, ஆண்டனியோ பாண்டரஸ், வெஸ்லி ஸ்னைப்ஸ், டெர்ரி க்ரீவ்ஸ்... என்று ஐம்பதுகளும், எழுபதுகளும் நடிக்கும் இப்படத்தை Patrick Hughes இயக்கியுள்ளார். இவர் இதுவரை ரெட் கில் என்ற ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தாத்தாக்களின் இந்த ஆக்சன்மேளா நான்கு ஐந்து என்று தொடருமோ என்பதுதான் இப்போதைய பயம்.