வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2014 (13:49 IST)

உலக அளவிலும் கேப்டனே கலெக்சன் கிங்

வட அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் கேப்டன் அமெரிக்கா - தி வின்டர் சோல்ட்ஜர் படத்துக்கே அதிக கலெக்சன். 
சென்ற வாரம் வெளியான கேப்டன் அமெரிக்கா 2, 2011 ல் வெளியான முதல் பாகத்தின் கலெக்சனை அனாயாசமாக கடந்துள்ளது. முதல் பாகத்தின் ஒட்டு மொத்த வெளிநாட்டு கலெக்சன் 193.9 மில்லியன் டாலர்கள். இரண்டாவது பாகம் நேற்றுவரை வெளிநாடுகளில் 207.1 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. 
 

வட அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளையும் சேர்த்து பாகம் 2-ன் கலெக்சன் 303.3 மில்லியன் டாலர்கள். இந்த வார இறுதியில் முதல் பாகத்தின் ஒட்டு மொத்த கலெக்சனான 370.6 மில்லியன் டாலர்களை இரண்டாவது பாகம் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் இதுதான் அதிக கலெக்சன். அதாவது யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ் சரித்திரத்தில் ஏப்ரல் மாத வெளியீட்டில் இதற்கே அதிக ஓபனிங்.
 
கேப்டன் அமெரிக்காவின் இரண்டாவது பாகம் சைனாவில் மட்டும் 39.2 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.
 
இந்தியாவிலும் படத்துக்கு அமோக வரவேற்பு. கலெக்சனில் சாதனை ஏதாவது செய்தாலும் வியப்பில்லை.