வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By Ravivarma
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (17:25 IST)

இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஜான் ட்ரவோல்டா

இந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (IIFA) என்று பெயர் வைத்து இந்தி சினிமாக்களுக்கு மட்டும் விருதுதரும் ஒரு சுயநல அமைப்புதான் இந்த IIFA. ராஜபக்சயின் அழைப்பை ஏற்று ஈழப்போர் முடிந்த பின் இலங்கையில் இந்த அமைப்பினர் விழா நடத்தியது தமிழர்களுக்கு நினைவிருக்கலாம்.
 
ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த நகரம் ஒன்றில் இந்த விருது விழா நடைபெறும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இந்த மூன்றும்தான் விழாவின் நோக்கம். ஒவ்வொரு வருடமும் இந்த காஸ்ட்லி திருவிழாவுக்கு ஹாலிவுட் நட்சத்திரம் யாராவது அழைக்கப்படுவார்.
 
இந்த வருடம்  விழாவில் கலந்து கொள்ளப் போகிறவர் ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்டா. 
 
இன்று அமெரிக்காவின் ப்ளோரிடாவில் க்ரீன் கார்ப்பெட் நிகழ்வு நடக்கிறது. சனிக்கிழமை விருது வழங்கும் விழா. ஜான் ட்ரவோல்டாவுக்கு இந்த நிகழ்வில் மோஸ்ட் பாப்புலர் ஆல் டைம் இன்டர்நேஷனல் ஸ்டார் இன் இன்டியா (Most Popular All time International star in India) விருது வழங்கப்படுகிறது.
 
ட்ரவோல்டாவின் ஸ்வார்ட்ஃபிஷ், பேஸ்ஆஃப், ப்ரோக்கன் ஆரோ படங்கள் இந்தியாவில் நல்ல கலெக்ஷனுடன் ஓடியவை. இதில் பேஸ்ஆஃப், ப்ரோக்கன் ஆரோ படங்களில் அவர் வில்லனாக கலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.