வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By Ravivarma
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (17:32 IST)

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஆங்க் லீ

ஆங்க் லீ என்ற பெயரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை 2000ல் வெளியான Crouching Tiger, Hidden Dragon  படத்தையே சாரும். ஆங்க் லீ இயக்கிய இப்படம் அந்த வருடத்துக்காகன சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
லீ கடைசியாக இயக்கிய படம் லைஃப் ஆஃப் பை. உலகம் முழுவதும் மூவாயிரம் கோடிகளுக்கு மேல் இப்படம் வாரிக்குவித்தது. இதையடுத்து Crouching Tiger, Hidden Dragon  படத்தின் ப்ரீக்வெலை இயக்கயிருக்கிறார்.
 
இந்தப் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ப்ரீக்வெலும் நாவலைத் தழுவியே எடுக்கப்பட உள்ளது. அதற்கான உரிமையை வாங்குவதில் சின்ன சிக்கல். அதனால்தான் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக கூறுகிறார்கள். அதேநேரம் படத்துக்கான பூர்வாங்க வேலையை லீ ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
 
சர்வதேச அளவில் அதிகம் வசூல் செய்த சைனீஸ் படம் என்ற பெயர் இன்றுவரை இந்தப் படத்துக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.