வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (12:40 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 3 நாளில் 800 கோடிகள்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 3 நாளில் 800 கோடிகள்

5. Warcraft 
 
டன்கன் ஜோன்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 7.2 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் பத்து தினங்களில் இப்படம் 38.4 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
4. Now You See Me 2
 
மேஜிக்கை மையப்படுத்திய இதன் முதல் பாகம் நல்லா கல்லாகட்ட இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். சென்ற வார இறுதியில் 9.4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ள இப்படம் முதல் பத்து தினங்களில் 41.1 மில்லியன் டாலர்களை சொந்தமாக்கியுள்ளது.


 
3. The Conjuring 2
 
முதல் பாகத்தின் வெற்றியால் 40 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதல் மூன்று தினங்களில் வசூலித்த இப்படம் இரண்டாவது வாரத்தில் 14.9 மில்லியன் டாலர்களாக கீழிறங்கி உள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் வசூல் 71.1 மில்லியன் டாலர்கள்.
 
2. Central Intelligence
 
ட்வைன் ஜான்சன் நடித்திருக்கும் இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 35.5 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 
 
1. Finding Dory
 
ஃபைண்டிங் நிமோ படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் ஃபைண்டிங் டோரி முதல் மூன்று தினங்களில் 135 மில்லியன் டாலர்களை - சுமார் 800 கோடிகளுக்கும் மேல் - வசூலித்து அசத்தியுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.