வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By Ravivarma
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (17:10 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 1200 கோடியை தாண்டிய கேப்டன் அமெரிக்கா

5. A Haunted House 2
ஹாரர் படம் என்றால் அமெரிக்கர்களுக்கு பிடிக்கும். அந்த ஒரே காரணத்துக்காக டாப் 10 ல் ஐந்தாவது இடத்தை இப்படம் பிடித்துள்ளது. மற்றபடி படத்தைப் பார்த்த அனைவரும் பேயுடன் குடித்தனம் நடத்திய பயத்தில் தியேட்டரிலிருந்து தெறித்து ஓடுவதாக தகவல். படம் அவ்வளவு போர். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.8 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
4. Transcendence 
சென்ற வருடம் லோன் ரேஞ்சர் என்ற 200 மில்லியன் டாலர் சுமார் படத்தை தந்து சக நடிகர்களால் விமர்சிக்கப்பட்ட ஜானி டெப்புக்கு இந்த வருடம் பரவாயில்லை. ட்ரான்ஸ்சென்டன்ஸ் முதல் மூன்று தினங்களில் 10.9 மில்லியன் டாலர்களை கலெக்ஷன் செய்தாலும் நல்ல படம் என்ற பெயரை வாங்கியிருக்கிறது.
 
3. Rio 2
இந்த அனிமேஷன் படத்துக்கு எதிர்பார்த்த கலெக்ஷன் அமையவில்லை. இரண்டாவது வாரமான சென்ற வார இறுதியில் 22.2 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் கலெக்ஷன் 75 மில்லியன் டாலர்கள்.
 

2. Heaven Is for Real
த மேன் இன் தி அயன் மாஸ்க், வீ வேர் சோல்ட்ஜ்யர்ஸ் போன்ற படங்களை இயக்கிய ரேன்டல் வாலசின் மற்றுமொரு படைப்பு. ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் நல்ல படம் என்ற பெயரைப் பெற்ற இப்படம் முதல் மூன்று தினங்களில் 22.5 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. ப்ரிவியூ காட்சிகளையும் சேர்த்து 29.6 மில்லியன் டாலர்கள்.
1. Captain America: The Winter Soldier
மூன்றாவது வாரத்திலும் இதற்கே முதலிடம். சென்ற வார இறுதியில் இதன் கலெக்ஷன் 25.6 மில்லியன் டாலர்கள். இதுவரை 200.5 மில்லியன் டாலர்கள்.