வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (17:51 IST)

வெளியூர் ரசிகர்களால் பிழைத்த டாம் க்ரூஸின் மிஷன்

மிஷன் இம்பாஸிபிள் சீரிஸை கேள்விப்படாத ஆக்ஷன்பட ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இதன் ஐந்தாம் பாகமான, மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன் இன்னும் யுஎஸ் டாப் 10 -இல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதை வைத்து படம் வசூலில் பட்டையை கிளப்புவதாக எண்ண வேண்டாம். படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர்கள். நேற்றுவரை - நான்கு வாரங்கள் முடிவில் - படத்தின் யுஎஸ் வசூல் 157.76 மில்லியன் டாலர்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் யுஎஸ் வசூல் நஷ்டம்தான். ஆனால் டாம் க்ரூஸ் ஹேப்பி. எப்படி? 157.76 மில்லியன் டாலர்கள் யுஎஸ்ஸில் வசூலித்த படம் வெளிநாடுகளில் 280.80 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. உள்நாட்டைவிட அதிக வசூல். மொத்தமாக இதுவரை 438.56 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான், அரபு நாடுகள் என்று மிஷன் இம்பாஸிபிள் படப்பிடிப்பை பறந்து பறந்து நடத்துவது சும்மாயில்லை. வெளிநாட்டு ரசிகர்கள் மட்டும் இல்லையென்றால் டாம் க்ரூஸின் மிஷன் எப்போதோ இம்பாஸிபிளாகியிருக்கும்.