வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 16 பிப்ரவரி 2015 (12:40 IST)

ரைட்டர்ஸ் கில்ட் அவார்ட் - த கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், த இமிடேஷன் கேம் படங்களுக்கு விருது

ரைட்டர்ஸ் கில்ட் அவார்ட் வருடா வருடம் ஆங்கிலப் படங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2015 -க்கான விருது கடந்த 14 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இரு முக்கிய படங்கள் விருது பெற்றுள்ளன.
 

 
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதுக்கு ஐந்து படங்கள் போட்டியிட்டன. த கிராண்ட் புடாபெஸ்ட், பாய்ஹுட், ஃபாக்ஸ்கேச்சர், நைட்க்ராவலர், விப்லாஸ். இதில் த கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் விருதை தட்டிச் சென்றது.
 
அதேபோல் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதுக்கு ஐந்து படங்கள் போட்டியிட்டன. அமெரிக்கன் ஸ்னைப்பர், த இமிடேஷன் கேம், கான் கேர்ள், கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி, வைல்ட்.
 
இதில் த இமிடேஷன் கேம் விருது வென்றிருக்கிறது. 
 
ரைட்டர்ஸ் கில்ட் விருது ஆஸ்கரில் பிரதிபலிக்குமா? இந்த மாதம் 23 -ஆம் தேதி தெரியும்.