வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 டிசம்பர் 2014 (10:15 IST)

சிறந்த விஷுவல் எபெக்ட் - ஆஸ்கர் வெல்லப் போவது யார்?

இந்த வருட ஆஸ்கர் போட்டியில் சிறந்த விஷுவல் எபெக்டுக்கான விருது எந்தப் படத்துக்கு கிடைக்கும்? எந்த வருடத்தையும்விட இந்த வருடம் கடும் போட்டி. 10 படங்கள் நான் நீ என்று போட்டியில் மிரட்டுகின்றன.
கேப்டன் அமெரிக்கா - த வின்டர் சோல்ட்ஜ்யர், கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி, எக்ஸ் மென் - டேய்ஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட், ஸ்பைடர் - மேன் 2, ட்ரான்ஸ்பார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன், காட்ஸில்லா, மேல்ஃபிஷன்ட், நைட் அட் த மியூஸியம் - சீக்ரெட் ஆஃப் டோம்ப். 
 
இந்த எட்டு படங்களுடன் பீட்டர் ஜாக்சனின் த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரும் மோதுகின்றன.
 
இன்றைய கணிப்புப்படி நோலனின் படத்துக்கே விருது கிடைப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. கடைசி நேரத்தில் பீட்டர் ஜாக்சனும் முந்தலாம். விருது அறிவிக்கும்வரை நகத்தை கடிக்கும் அளவுக்கு த்ரில்லிங்கான போட்டி.