1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 டிசம்பர் 2014 (10:00 IST)

கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வெளிவரும் த கேம்ப்ளர்

பாராமவுண்ட் பிக்சர்ஸ் தனது த கேம்ப்ளர் படத்தை சரியாக டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுகிறது.
1974 -ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இந்த மாதம் வெளியாகவிருக்கும் த கேம்ப்ளர். மார்க் வால்பெர்க் விரும்பி இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது கட்டுமஸ்தான உடம்பில் கணிசமான கிலோவை இந்தப் படத்துக்காக கரைத்து ஆளே ஒரு புரபஸரைப் போல் மாறியுள்ளார்.
 
டிசம்பர் 19 த கேம்ப்ளர் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று பட வெளியீட்டை டிசம்பர் 25 -க்கு மாற்றியுள்ளனர். 
 
டிசம்பர் 25 டிஸ்னியின் இன் டு த வூட்ஸ், யூனிவர்சலின் அன்புரோக்கன், வார்னர் பிரதர்ஸின் அமெரிக்கன் ஸ்னைப்பர், சோனியின் இன்டர்வியூ, த கேம்ப்ளரை வெளியிடும் பாராமவுண்டின் செல்மா ஆகிய படங்களும் கிறிஸ்மஸுக்கு வெளியாகவிருப்பது முக்கியமானது.