வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (12:10 IST)

ஏஎஃப்ஐ திரைப்பட விழாவில் இடம்பெறும் த கேம்ப்ளர்

அமெரிக்காவில் தயாராகும் படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு தகுதி பெறுமா என்பதை உரசிப் பார்க்கும் உரைகல்தான் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தும் திரைப்பட விழா. இதில் இடம்பெறும் படங்கள் ஆஸ்கருக்கு முன்னுரிமை பெறும் என்பது ஹாலிவுட் நம்பிக்கை.
 
இந்த வருடம் த கேம்ப்ளர் திரைப்படம் இங்கு திரையிடப்படுகிறது. 
எழுபதுகளில் இதே பெயரில் வெளிவந்த படத்தை இப்போது ரீமேக் செய்துள்ளனர். Rupert Wyatt  படத்தை இயக்கியுள்ளார். நடித்திருப்பது மார்க் வால்பெர்க். 
 
கேம்ப்ளிங்கில் ஈடுபாடு கொண்ட புரஃபஸராக மார்க் நடித்துள்ளார். இதற்காக தனது கட்டுமஸ்தான உடம்பை கணிசமான அளவு குறைத்து புரஃபஸர் லுக்கை கொண்டு வந்திருக்கிறார். 
 
ஏஎஃப்ஐ -யில் படத்தை திரையிடுகிறார்கள். அப்போ படம் ஆஸ்கர் போட்டிக்கு நிச்சயம் வருமே என்று சந்தேகமாகவும், சந்தோஷமாகவும் பேசிக் கொள்கிறார்கள். 
 
இந்த திரைப்படவிழா நவம்பர் ஆறிலிருந்து பதிமூன்றுவரை நடக்க உள்ளது.