1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 16 மார்ச் 2015 (14:24 IST)

டேக்கன் இயக்குனரின் அடுத்த அதிரடி, த கன்மேன்

ஷான் பென் நடிக்கும் படம் என்றால் நிச்சயம் பார்க்கிற மாதிரி இருக்கும் என்ற மினிமம் கியாரண்டி உண்டு. அவரது நடிப்பில் மார்ச் 20 வெளியாகவிருக்கும் படம், த கன்மேன்.
இந்தப் படம் யுஎஸ்ஸில் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே - ஃபெப்ரவரி 20 -ஆம் தேதியே இந்தியாவில் வெளியானது. 
 
டேக்கன் படத்தை இயக்கிய Pierre Morel  இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் பென்னுடன் ஆஸ்கர் விருது பெற்ற ஜாவியர் பர்டமும் இருக்கிறார். அதனால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. அடுத்தவார பாக்ஸ் ஆபிஸை த கன்மேன் ஆக்கிரமிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 
இன்சர்ஜன்ட் படமும் அடுத்த வாரம் வெளியாகிறது. அதனால் த கன்மேனுக்கு இரண்டாவது இடமே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.