1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 7 ஜனவரி 2015 (14:51 IST)

வெள்ளிக்கிழமை வெளியாகும் டேக்கன் 3

உலகம் முழுவதுமுள்ள ஆக்ஷன்பட ரசிகர்களை கவர்ந்த படம், லியாம் நீஸன் நடித்த டேக்கன். லுக் பெசானின் திரைக்கதையில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது.
 

 
லுக் பெசானின் திரைக்கதையில் உடனேயே டேக்கன் 2 தயாரானது. அதே லியாம் நீஸன். முதல் பாகம் எவ்வளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவு எதிர்மறை விமர்சனத்தை பெற்றது டேக்கன் 2. 
 
இந்நிலையில், டேக்கன் 3 தயாராகிறது என்ற போதே பலருக்கும் பேதியானது. இந்தப் பாகத்தில் யாரை எதிரிகள் கடத்தப் போகிறார்கள்? லியாமின் காரையா? நாயையா? இல்லை அவர் வீட்டு பூனையையா? என்று ரசிகர்களே கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். பட், லுக் பெஸான் சறுக்கினால் உடனே எழுந்திருக்காமல் போக யானை கிடையாது. அவர் குதிரை. 
 
டேக்கன் போலவே டேக்கன் 3 -யும் அமர்க்களமாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படம் இந்தியாவிலும், யுஎஸ்ஏ யிலும் ஒரேநாளில் - வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ஆக்ஷன்பட ரசிகர்கள் இப்போதே தைரியமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.