வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 24 செப்டம்பர் 2014 (14:35 IST)

சொந்த வாழ்க்கையை படமாக்கும் சில்வஸ்டர் ஸ்டாலோன்

உலகம் முழுவதுமுள்ள ஆக்ஷன் ஹீரோக்களுக்கு ஆதர்சமாக விளங்கும் சிலரில் சில்வஸ்டர் ஸ்டாலோனும் ஒருவர். இவரது ராக்கி மற்றும் ராம்போ சீரிஸ்கள் உலகம் முழுவதும் பெற்ற வரவேற்பு எந்த நடிகருக்கும் பொறாமையை வரவழைக்கும்.

ஸ்டாலோனின் கிளிப் ஹேங்கர் திரைப்படம் சென்னையில் 175 நாள்கள் ஓடியது.
 
தனது ராம்போ சீரிஸின் ஐந்தாவது பாகத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளார் ஸ்டாலோன். கூடவே த எக்ஸ்பென்டபிள்ஸ் நான்காம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் புடாபெஸ்டில் தொடங்குகிறார். அத்துடன் தனது சொந்த வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
 
ஸ்டாலோனின் தயார் விருப்பப்பட்டதன் பேரில் சுயசரிதையை படமாக்கும் முயற்சியில் ஸ்டாலோன் இறங்கியுள்ளார். படத்தை அவரே எழுதி இயக்குவார் என தெரிகிறது.