வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 பிப்ரவரி 2015 (15:13 IST)

சொத்துகள் எனக்குதான் - ராபின் வில்லியம்ஸின் மனைவி பிள்ளைகள் போட்டா போட்டி

இரண்டு பொண்டாட்டிக்காரனின் நிலைமை உயிரோடு இருக்கும் போதும், இறந்த பிறகும் ஒரேபோல்தான். அதாவது மத்தளத்தைப் போல் இரண்டு பக்கம் இடி. மறைந்த நடிகர் ராபின் வில்லியம்ஸுக்கு மூன்று மனைவிகள், மூன்று பிள்ளைகள். மத்தளம் தோற்றுவிடும். பலமுனைகளில் அடிதடிகள்.
 
ராபின் வில்லியம்ஸ் திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டபோது அவரது ரசிகர்கள் திகைத்துப் போயினர். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் கவலையை போக்கடித்த மேதை அவர். அவரே தற்கொலை செய்து கொண்டால்?
 
ராபின் வில்லியம்ஸின் ரசிகரும், அவரது பல படங்களை காசு தராமல் தமிழில் எடுத்தவருமான கமல், ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்திருந்தால் அவரை நான் வெறுக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுத்தார். 
 
ராபின் வில்லியம்ஸ் இறந்து ஆறு மாதம் ஆவதற்குள் அவரது 3-  வது மனைவி சூஸனும் அவரது முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தைகளும் - மொத்தமாக 3 பேர் - தனித்தனியே வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ராபின் வில்லியம்ஸின் சொத்துக்காகதான் இந்த வழக்கு.
 
தற்கொலை செய்து கொள்ளும்முன் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை குறிப்புக்குப் பதில் உயில் எழுதி வைத்திருக்கலாம்.