வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 13 டிசம்பர் 2014 (15:13 IST)

புதிய கிங் காங் திரைப்படம், காங் - ஸ்கல் ஐலண்ட்

எத்தனைமுறை பார்த்தாலும் எத்தனை பகுதிகள் எடுத்தாலும் சலிக்காத கதாபாத்திரங்களில் ஒன்று கிங் காங். ராட்சஸ மனித குரங்கு. அதன் புதிய பாகத்தை 2016 நவம்பரில் வெளியிடுவதாக யூனிவர்சல் அறிவித்திருந்தது. அதில் இப்போது மாற்றம்.
Kong: Skull Island என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய படத்தின் கதையும் கிங் காங்கின் பிறப்பிடமான மரங்களடர்ந்த தீவில்தான் நடக்கிறது. ஆனால் மனித நகாகரிகத்துக்கு முந்தையகட்டம். படத்தை நவம்பர் 4 2016 வெளியிடுவதாக முன்பு அறிவித்திருந்தனர். தற்போது மார்ச் 10 2017 -க்கு தள்ளி வைத்துள்ளனர்.
 
ரிலீஸ் தள்ளிப் போனதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. படம் 3டி யில் தயாராகிறது.