வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (15:31 IST)

ஜான் விக் ஜெயிச்சிட்டார்... மூன்றாவது பாகம் கன்ஃபார்ம்

2014 -இல் கியானு ரீவ்ஸ் நடிப்பில் ஜான் விக் படம் வெளியானது. படத்தில் கியானு ரீவ்ஸின் பெயர்தான், ஜான் விக்.

 
சாதாரண பழிவாங்கும் கதையான இதில், ஜான் விக் என்ற புரபஸனல் கில்லரை அறிமுகப்படுத்தும் காட்சி பிரமாதமாக அமைந்திருந்தது. மற்றபடி ஒரே டுமீல்..டுமீல்... 20 மில்லியன் டாலர்களில் எடுத்த படம், யுஎஸ்ஸில் மட்டும் 42 மில்லியன்  டாலர்களை வசூலித்தது. வெளிநாடுகளின் வசூல் தனி.
 
படம் வெற்றி பெற்றதும் உடனே இரண்டாவது பாகத்துக்கு தயாராயினர். முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாம் பாகத்தின்  ட்ஜெட்டை அப்படியே டபுளாக்கினர். 40 மில்லியன் டாலர்கள். ஜான் விக் 2 இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது. முதல் பத்து தினங்களில் இதன் யுஎஸ் வசூல் மட்டும் 61.2 மில்லியன் டாலர்கள். யுஎஸ்ஸில் 100 மில்லியன் டாலர்களை படம் தாண்டும் என்று கணித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் படத்தின் வசூல் அமோகம்.
 
இரண்டாவது பாகமும் வெற்றி என்பதால் மூன்றாவது பாகத்துக்கு இப்போதே தயாராகிவிட்டனர்.