வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஜூலை 2015 (09:47 IST)

நான் கர்ப்பமா...? ஓ கடவுளே

ஜெனிஃபர் லாரன்ஸ்தான் இப்படி ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
 
சென்றவாரம் ஜெனிஃபர் லாரன்ஸ் குறித்த கிசுகிசுதான் அதிகம் பகிரப்பட்டது. வேறொன்றுமில்லை, ஜெனிஃபர் கர்ப்பமாக இருக்கிறார் என்று மீடியா கொளுத்திப்போட, அனைவரும் அதுபற்றியே விவாதித்தனர். இது ஜெனிஃபரின் காதுகளையும் எட்டியது.
நான் கார்ப்பமா? ஓ கடவுளே என்று ஆச்சரியத்துடனும் அலுப்புடனும் இந்த கிசுகிசுவை அவர் மறுத்தார். ஜெனிஃபர் நடித்துள்ள த ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங் ஜாய் வெளியாகவிருக்கிறது. அடுத்து தயாராகும் எக்ஸ் - மென் படத்திலும் நடிக்கிறார்.
 
எக்ஸ் - மென் படத்துக்காக ஜெனிஃபர் ஒன்றை தீவிரமாக வளர்த்து வருகிறார். வயிறா என்று கேட்காதீர்கள். அதுவல்ல, மயிர். ஆம், எக்ஸ் - மென்னில் நீண்ட தலைமுடியுடன் தோன்ற வேண்டும் என்பதால் தலைமுடி வளர்க்கச் சொல்லியிருக்கிறார்களாம்.