வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sugapriya
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (11:11 IST)

அதிரடிக்கு தயாராகுங்கள்... வருகிறார் ஜேஸன் பார்ன்

அதிரடிக்கு தயாராகுங்கள்... வருகிறார் ஜேஸன் பார்ன்

ஜேஸன் பார்ன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலம். த பார்ன் ஐடென்டிட்டி படத்தில் ஜேஸன் பார்ன் கதாபாத்திரத்தில் மாட் டாமன் நடித்தார். எதையும் சராசரி மனிதர்களைவிட முன்னதாகவும், துல்லியமாகவும் கணிக்கக்கூடிய திறன் வாயந்தவர் ஜேஸன் பார்ன். இல்லை அப்படி உருவாக்கப்பட்டவர்.



ஜேஸன் பார்ன் கதாபாத்திரத்தை வைத்து வெளியான த பார்ன் ஐடென்டிட்டி, த பார்ன் சூப்பமஸி, த பார்ன் அல்டிமேட்டம் மூன்றும் உலக அளவில் ஹிட். ஆக்ஷன் படங்களில் இந்த மூன்றும் ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை.

பிறகு த பார்ன் லீகெஸி என்ற பெயரில் ஜேஸன் பார்ன் போன்றே உருவாக்கப்பட்ட இன்னொரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்தனர். படம் சுமாராகவே போனது.

இந்நிலையில் ஜேஸன் பார்ன் என்ற பெயரில் ஐந்தாவது படத்தை வெளியிடுகின்றனர். பார்ன் சீரிஸில் இரண்டாவது, மூன்றாவது பாகங்களை இயக்கிய பால் கிரீன்கிராஸ் இயக்க, மாட் டாமன் நடித்திருப்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. வரும் 29 -ஆம் தேதி யுஎஸ்ஸில் வெளியாகும் படம், ஆகஸ்ட் 5 இந்தியாவில் வெளியாகிறது.

அதிரடி நிச்சயம்... ஆட்டத்துக்கு தயாராகுங்கள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்