திருமணத்திற்கு முன்பே என் மனைவி கர்ப்பம். ஜாக்கிசான் வெளியிட்ட ரகசியம்


sivalingam| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (22:48 IST)
ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அதிரடி ஆக்சன் நாயகர் ஜாக்கிசான். இவர் கடந்த 1982ஆம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லினை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்றுதான் இதுவரையில் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஜோன் லின் தனது காதலியாக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமானதாகவும், கர்ப்பத்தின் கட்டாயம் காரணமாகவே அவரை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டது என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


 


அதுமட்டுமின்றி ஜோன்லினை தவிர தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு என்றும், ஆசிய அழகி பட்டம் பெற்ற எலைன் என்ஜி என்றும் ஜாக்கி சான் மனம் திறந்துள்ளார். அதுமட்டுமின்றி  ஜாக்கிசானுக்கும் , எலைன் என் ஜியுக்கும் எட்டா என்ற மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய நடிகை மல்லிகா ஷெகாவத்துக்கும் ஜாக்கிசானுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது என்பது கிசுகிசுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :