1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 24 ஜனவரி 2015 (08:54 IST)

2014 -இல் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம்

2014 வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் எது? ஹாலிவுட் படங்கள் குறித்த குருவி மூளை உள்ளவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருக்கும். ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜாய் பார்ட் 1.
தமிழில் ஹிட்டாகும் சில படங்களைப் பார்த்தால், இந்தப் படமெல்லாம் எப்படி ஹிட்டானது என்று தோன்றும். அதேபோல் ஹாலிவுட்டில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில சீரிஸ்கள் உண்டு. அதில் முதன்மையானது, டுவிலைட் சாகா. வேம்பயர், ஓநாய் என்று அவர்கள் அளக்கும் சுவாரஸியமில்லாத அந்த கதைகளை வடஅமெரிக்க இளைஞர்கள் பெரும் ஹிட்டாக்கி ஆச்சரியப்பட வைத்தனர். அந்தளவுக்கு இல்லை என்றாலும் ஹங்கர் கேம்ஸ் சீரிஸும் ஒரு சுமார் சீரிஸ்தான்.
 
இந்த வருடம் ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜாய் பார்ட் 1 வெளியானது. இது கடந்த புதன்வரை 333.2 மில்லியன் டாலர்களை வசூலித்து யுஎஸ்ஸில் 2014 வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. இதற்கு அடுத்த இடத்தில், கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி. 333.17 மில்லியன் டாலர்கள்.
 
ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் எந்த வருடம் வெளியானாலும் அந்த வருடம் அதுதான் டாப் 1 இடத்தைப் பிடிக்கும். அப்படியொரு வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு.