வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 டிசம்பர் 2014 (09:50 IST)

இரண்டு வாரங்கள் 1500 கோடிகள் - டாலரை அள்ளும் ஹங்கர் கேம்ஸ்

ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் எப்போது வெளிவந்தாலும் டாலரை மில்லியன் கணக்கில் அள்ளும். அந்த சீரிஸில் புதிய படமான ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜாய் சென்ற 21 ஆம் தேதி யுஎஸ்ஸில் வெளியானது.
வெளியான முதல் நாளிலிருந்து டாலர் அறுவடையை படம் தொடங்கியது. டிசம்பர் 4 -ஆம் தேதிவரை இதன் யுஎஸ் வசூல் மட்டும் 236.13 மில்லியன் டாலர்கள். ரூபாயில் ஏறக்குறைய 1500 கோடிகள் வரும். 
 
கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் நான்கு வாரங்கள் முடிவில் 147 மில்லியன் டாலர்களே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.