Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவுரவ ஆஸ்கார் விருது: நடிகர் ஜாக்கிசான்!

Sasikala| Last Modified திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:11 IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 
இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார்.
 
ஹாங்காங்கில் பிறந்த இவருக்கு தற்போது 62 வயது ஆகிறது. தனது 17-வது வயதில் புரூஸ் லீ நடித்த ‘பிஸ்ட் ஆப் பியூரி,  என்டர் த டிராகன்’ உள்ளிட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டில் இருந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகர், இயக்குநர், சண்டைப்பயிற்சி இயக்குநர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என்று  பன்முக திறமைக் கொண்ட ஜாக்கிசான், 
 
சினிமாவில் 50 ஆண்டுகள் இயங்கி வருகிறார். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், காமெடி மற்றும் ஆக்‌ஷன் மூலம் உலக அளவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். 30-க்கும் மேற்பட்ட படங்களில் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :