வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (14:45 IST)

ஓநாய் மனிதன் - விடைபெறுகிறார் ஹ்யூக் ஜாக்மேன்?

எக்ஸ் மென் சீரிஸில் வால்வரைனாக நடித்து, உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தவர், ஹ்யூக் ஜாக்மேன். அவர், வால்வரைன்... ஒன் லாஸ்ட் டைம் என்ற பெயரில் தனது இரும்பு கத்தி முஷ்டி படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து பல்வேறு ஹாஸ்யங்கள். 
 
எக்ஸ் மென் அபோகலிப்ஸ் படம் 2016 மே 27 வெளியாகிறது. அதில் ஜாக்மேன் நடித்துள்ளார். அதுதான் அவர் வால்வரைனாக நடிக்கும் கடைசிப்படம், அதைத்தான் சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என்றும்,
 
2017 மார்ச் 3 வெளியாகவிருக்கும், த வால்வரைன் 3 படம்தான் அவரது கடைசிப் படம் என்றும் இருவேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. 
 
2000 -இல் வெளியான எக்ஸ் மென் படத்திலிருந்துதான் வால்வரைனாக நடிக்க ஆரம்பித்தார் ஜாக்மேன். பதினைந்து வருடங்களில் 7 படங்களில் இந்த வேடத்தை அவர் செய்திருக்கிறார். வால்வரைனாக இன்னொரு நடிகரை கற்பனை செய்வது ஜாக்மேனின் ரசிகர்களுக்கும் வால்வரைன் கதாபாத்திரத்தை ரசிப்பவர்களுக்கும் கடினமாகவே இருக்கும்.