வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 15 ஜூலை 2015 (09:03 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - மூன்று நாளில் 680 கோடிகளை கடந்த அனிமேஷன் படம்

5. The Gallows
இந்த ஹாரர் படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 9.81 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

4. Terminator Genisys  
நான்காவது இடத்தில் டெர்மினேட்டர் ஜெனிசைஸ். சென்ற வார இறுதியில் 13.83 மில்லியன் டாலர்களை மட்டும் வசூலித்த இப்படம் இதுவரை 68.85 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

 
 

3. Inside Out
இந்த அனிமேஷன் படம் இப்போதும் வசூல் வேட்டையை தொடர்கிறது. சென்ற வார இறுதியில் 17.67 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 284.20 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது. 

 
 

2. Jurassic World
அசைக்க முடியாத வசூலுடன் இரண்டாவது இடத்தில் டைனோசர்கள். சென்ற வார இறுதியில் 18.15 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 590.69 மில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 
 

1. Minions
சென்ற வெள்ளிக்கிழமை இந்த அனிமேஷன் படம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 115.72 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 680 கோடிகளைவிட அதிகம்.