1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 7 ஜனவரி 2015 (14:43 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

5. Night at the Museum: Secret of the Tomb
நைட் அட் தி மியூஸியம் சீரிஸின் மூன்றாவது பாகமான இது எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சென்ற வார இறுதியில் 14.52 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம் இதுவரை 89.85 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.
 

4. The Woman in Black 2: Angel of Death
இந்த ஹாரர் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 15.03 மில்லியன் டாலர்கள்.
 

3. Unbroken
ஏஞ்சலினா இயக்கியிருக்கும் போர் பின்னணியில் அமைந்த இப்படம் சென்ற வார இறுதியில் 18.17 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 87.65 மில்லியன் டாலர்கள்.
 

2. Into the Woods
இந்த ஹாரர் படம் சென்ற வார இறுதில் 18.73 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 90.87 மில்லியன் டாலர்கள்.
 

1. The Hobbit: The Battle of the Five Armies
 
பீட்டர் ஜாக்சனின் இந்தப் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. சென்ற வார இறுதியில் 21.73 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் மூன்று வாரங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 220.60 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.