வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (17:42 IST)

பாஸ்ட் 8 படத்தில் நடிக்கும் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மகன்

பாஸ்ட் 8 படத்தில் நடிக்கும் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மகன்

சென்ற வருடம் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பிய படம், பாஸ்ட் அண்ட் பியூரியஸின் ஏழவது பாகமான ப்யூரியஸ் 7.


 


இதன் அடுத்த பாகம், பாஸ்ட் 8 என்ற பெயரில் தயாராகிறது. 2017 -இல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
இந்த சீரிஸின் முதல் பாகத்திலிருந்தே இடம்பெறும் வின் டீசல் இடையில் சேர்ந்து கொண்ட ட்வைனி ஜான்சன், சென்ற பாகத்தில் இணைந்த ஜேசன் ஸ்டெதம் ஆகியோர் எட்டாவது பாகத்திலும் இருக்கிறார்கள். கூடுதலாக, மேட் மேக்ஸ் - ஃப்யூரிரோடு படத்தில் அசத்திய சார்லிஸ் த்ரோனும் இடம்பிடித்துள்ளார்.
 
சமீபத்திய தகவல், முக்கியமான வேடம் ஒன்றில் ஸ்காட் ஈஸ்ட்வுட்டும் நடிக்க உள்ளார். இவர் பிரபல நடிகர், இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மகன். 
 
பாஸ்ட் 8 படத்தை கேரி கேரி இயக்குகிறார்.