வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (09:46 IST)

20 வருடங்களுக்குப் பிறகு சிரிக்க வைக்க வரும் டம்ப் அண்ட் டம்பர் டூ

1994 -இல் டம்ப் அண்ட் டம்பர் வெளியானது. ஜிம் கேரி, ஜெஃப் டேனியல்ஸ் நடித்த இந்த காமெடிப் படம் யுஎஸ்ஸை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்களை சிரிக்க வைத்தது. 
பொதுவாக ஒரு படம் வெற்றி பெறும்போது உடனடியாக அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து ரசிகர்களை படுத்துவது ஹாலிவுட்டின் பழக்கம். அதிர்ஷ்டவசமாக இந்தப் படம் தப்பியது. டம்ப் அண்ட் டம்பரை இயக்கிய பாபி மற்றும் பீட்டர் ஃபாரெலி 20 வருடங்களுக்குப் பிறகு டம்ப்ட் அண்ட் டம்பர் டூ என்ற பெயரில் சீக்வலை எடுத்தனர். படம் நாளை திரைக்கு வருகிறது.
 
முதல் பாகத்தில் நடித்த ஜிம் கேரி, ஜெஃப் டேனியல் இருவரும்தான் இதிலும் நாயகர்கள். முதல் பாகத்தில் வரும் அவர்களின் நாய் போல் டிஸைன் செய்யப்பட்ட காரும் இதில் இடம்பெறுகிறது.
 
ஏற்கனவே ப்ரிவியூவில் படத்தைப் பார்த்தவர்கள், இரண்டாம் பாகம் ஏமாற்றவில்லை என ஒரே குரலாக கூறுகிறார்கள். எதற்கும் சிரிக்க தயாராகுங்கள்.