வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2015 (16:06 IST)

வருகிறது பிளேடு ரன்னரின் இரண்டாவது பாகம்

ரிட்லி ஸ்காட்டின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று, பிளேடு ரன்னர். 1982 -இல் வெளிவந்த இந்தப் படம் இன்னும் உலக ரசிகர்களின் மனதில் தங்கியுள்ளது. இதுவரை வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் பிளேடு ரன்னருக்கு முக்கிய இடமுண்டு.
கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு பிளேடு ரன்னரின் இரண்டாவது பாகத்தை எடுக்கின்றனர். முதலாவது பாகத்தில் நடித்த, ஹாரிஸன் ஃபோர்ட் இதிலும் இருக்கிறார். படத்தை இயக்குவது, ரிட்லி ஸ்காட் அல்ல, Denis Villeneuve. 
 
டெனிஸ் பிரிசனர்ஸ், பாலிடெக்னிக் போன்ற படங்களை இயக்கியவர். எழுத்தாளர் ஜோஸ் ஸnரமகோவின் சிறுகதையை இவர் எனிமி என்ற பெயரில் திரைப்படமாக்கினார். அப்படம் 2013 -இல் திரைக்கு வந்தது.
 
திறமையான இயக்குனர் என்றாலும், பிளேடு ரன்னர் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷனின் இரண்டாவது பாகத்தை இவர் எப்படி எடுக்கப் போகிறார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.