வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Caston
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (14:56 IST)

உஷார்... அழகான திருடிகள் வருகிறார்கள்

ஓஸன்ஸ் லெவன், டுவெல், தர்ட்டீன் படங்களை பார்க்காதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட், மாட் டாமன் உள்பட பலர் நடித்த இந்த மூன்று திரைப்படங்களும் திருட்டை மையப்படுத்தியவை. திருட்டை ஒரு கலையாக காண்பித்தவை.


 

இதில் ஓஸன்ஸ் லெவன் படத்தை ரீபூட் செய்கிறார்கள். ஒரிஜினலில் திருடர்கள் அனைவரும் ஆண்கள். ரீபூட்டில் ஒரு மாறுதலுக்கு அனைவரும் பெண்கள். அவர்களை வழி நடத்தும் கூட்டத்தின் மிகப்பெரிய திருடியாக நடிக்கப் போகிறவர் சான்ட்ரா புல்லக். ஒரிஜினலில் ஜார்ஜ் க்ளூனி ஏற்று நடித்த கதாபாத்திரத்தையே இவர் ரீபூட்டில் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

ஓஸன்ஸ் லெவன், ஓஸன்ஸ் டுவெல், ஓஸன்ஸ் தட்டீன் ஆகிய மூன்று படங்களையும் சோடன்பர்க் இயக்கியிருந்தார். ரீபூட்டை இயக்கப் போகிறவர் ஹங்கர் கேம்ஸ் படத்தை இயக்கிய  ராஸ்.

அழகான திருடிகள் வரப்போகிறார்கள் பொருள்கள் பத்திரம்.