வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (16:52 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்ற ஐந்து ஹாலிவுட் படங்கள்.


 


5. Mechanic: Resurrection:

மெக்கானிக் படத்தின் இரண்டாம் பாகமான இது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் யுஎஸ்ஸில் முதல் 3 தினங்களில் 7.5 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.

4. Sausage Party:

அனிமேஷன் படமான இது சென்ற வார இறுதியில் 7.7 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல், 80 மில்லியன் டாலர்கள்.

3. Kubo and the Two Strings:

இதுவும் அனிமேஷன் படம்தான். கொஞ்சம் ஆக்ஷனும் கலந்தது. சென்ற வார இறுதியில் 7.9 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் முதல் 10 தினங்களில் 24.9 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

2. Suicide Squad:

வில் ஸ்மித் நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் 12.10 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 282.9 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது.

1. Don't Breathe:

ஹாரர் படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று நாளில் 26.10 மில்லியன் டாலர்களை தனதாக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது.