வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (14:28 IST)

2017 ஆஸ்கர் விழா: முழுமையான விருதுப் பட்டியல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு  பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 
89வது ஆஸ்கர் விருது விழாவான இதில் 24 பிரிவுகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. லா லா லேண்ட் என்ற  திரைப்படம் 14 பிரிவுகளிலும் மூன்லைட், அரைவல் ஆகிய திரைப்படங்கள் 8 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ‘லா லா லேண்ட்’ திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.
 
89வது ஆஸ்கர் விருது விழாவின் முழு விவரம்:
 
சிறந்த நடிகர்: கேஸி ஆப்லக் (மான்செஸ்டர் பை த சீ)
 
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)
 
சிறந்த இயக்குநர்: டேமியன் (லா லா லேண்ட்)
 
சிறந்த துணை நடிகர்: மஹெர்ஷாலா அலி (மூன்லைட் திரைப்படத்திற்காக)
 
சிறந்த ஒப்பனைக்கான விருது: சூசைட் ஸ்குவேட்
 
சிறந்த ஆடை வடிவமைப்பு: கோலீன் அட்வூடு (பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் திரைப்படத்திற்காக)
 
சிறந்த ஒலி அமைப்பு: அரைவல் 
 
கவுரவ ஆஸ்கர் விருது: ஜாக்கிசான்
 
சிறந்த ஆவணப்படம்: ஓ.ஜே.மேட் இன்
 
சிறந்த துணை நடிகை: வயோலா டேவிஸ் (ஃபென்சஸ் திரைப்படத்திற்காக)
 
சிறந்த அனிமேசன் குறும்படம்: பைபர்
 
சிறந்த அனிமேசன் திரைப்படம்: ஸூடோபியா படம்
 
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: லா லா லேண்ட்
 
சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ்: தி ஜங்கிள் புக்
 
சிறந்த படத்தொகுப்பு: ஹாக்ஸா ரிட்ஸ்
 
சிறந்த பாடல் சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)
 
சிறந்த ஒளிப்பதிவு: லா லா லேண்ட்
 
சிறந்த பின்னணி இசை: லா லா லேண்ட்
 
சிறந்த ஆவண குறும்படம்: த ஒயிட் ஹெல்மெட்ஸ்
 
சிறந்த திரைக்கதை: மான்செஸ்டர் பை த சீ
 
சிந்த தழுவல் திரைக்கதை: மூன்லைட்
 
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: சிங்
 
சிறந்த அயல்மொழி திரைப்படம்: த சேல்ஸ் மேன் 
 
இப்படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாரி விழாவில் பங்கேற்கவில்லை. ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்ததைக் கண்டித்து ஆஸ்கர் விருதை அவர் புறக்கணித்துள்ளார்.