வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

எத்திசையில் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

எத்திசையில் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.


 


பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
 
திருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைப்பர். உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள் வைப்பர்.
 
கிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்
மேற்கு முகத் தீபம் - பகை விலகும்
வடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்
தெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.
 
கிழக்கு, மேற்கு, வடக்கு, ஆகிய திசைகளில் மட்டுமே விளக்கேற்றுவர். திருவிளக்கை கிழக்கு முகமாக வைத்து, வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி அமருவர்.