Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் சில நம்பிக்கைகள்...

Widgets Magazine

நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய  ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.
 
வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு  8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
 
எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு  அதிகரித்துக் கொண்டே செல்லும். எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ, பொருட்கள் எல்லாம் சுத்தமாக  அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ, அங்கெல்லாம் செல்வம் குவியும்.
 
சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும். இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.சில நிறுவனங்கள், கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு  எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும். அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.
 
துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல் (இன்றைய கல்லூரி மாணவிகள் விடுதிகளில்  தினமும் செய்வது), எதிர்மறையான எண்ணங்கள்(அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது, தவறான ஆலோசனை தருவது) அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும்  மூதேவியின் அடையாளங்களாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கோவில் வழிபாட்டின் போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய செயல்கள்!

ஆன்மிகத்துக்கு பல முகங்கள் உண்டு. அவர்றில் ஒன்று கோவில் வழிபாடு. இருக்கும் இடத்தில் ...

news

நினைப்பதை ஆழ்மனதில் பதியவைக்கும் குபேர முத்திரை!

குபேர முத்திரை முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ...

news

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் ...

news

திருஷ்டி தோஷம் நம் வீட்டிலிருந்து போக்க எளிய பரிகாரம்!

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் ...

Widgets Magazine Widgets Magazine