1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

ஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்!!!

ஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்!!!

துளசி
 
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும். உண்ட விஷத்தை முறிக்க. தோல் சம்பந்தமான நோய் குணமாக்க இவை பய்ன்படுகிறது.
 
அரசமரம்
 
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

 
ஆலமரம்
 
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
 
வில்வமரம்
 
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.
 
வேப்பமரம்
 
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

நெல்லி மரம்

திருமாலின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதமிருப்பவர்கள் துவாதசி உணவில் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம்.