செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

மகரஜோதியை காண பொன்னம்பல மேட்டில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில், மகர சங்கரம பூஜை நடைபெறுகிரது.


 


திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து அனுப்பப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பசாமிக்கு அபிஷெகம் செய்யப் படுகிறது. அதன் பின்னர் மீண்டும் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பசாமி கோயிலின் மேல்சாந்தியும், தந்திரியுமே, திருவாபரணப் பெட்டியை மகர ஜோதியன்று பெற்று நடை அடைத்து அலங்காரம், செய்விக்கின்றனர். 
 
பின்னர் நடை திறக்கப்பட்டு தீபாரதனை நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டினையே கண்டு கொண்டிருப்பர். சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் வானில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அனைவரும், “சாமியே! சரணம் ஐயப்பா! என உற்சாக முழக்கமிடுவது விண்ணை எட்டும். அக்கரகோஷ ஒலியினை ஒட்டி மகர ஜோதி காட்டுவர். மூன்று முறை ஜோதி தரிசனம் கிடைக்கும்.  வாழ்வில் ஒவ்வொருவரும் இதனை ஒரு முறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.
 
ஒருமுறை ராமபிரான் இலக்குவனுடைய சபரிமலை காட்டின் வழியே செல்லும்போது சபரி என்ற மூதாடியை அந்திக்கிறாஇ.  இராமருக்கு மிகுந்த அன்புடன் காய், கனிகளை அளிக்கிறாள் சபரி. 
 
இராமபிரான் அவளது அன்பினை ஏற்று காய்கனிகளை வாங்கிக் கொள்கிறார். அவ்விடம் தெய்வீகக் கலை பொருந்திய இளைய தவசியைக் கண்டு அதுபற்றி விசாரிக்க சபரி, இவரே தர்மசாஸ்தா என உரைக்கிறாள். இராமர் தவசியிடம் செல்ல, தவசியான ஐயப்பன் இராமரை வரவேற்றி இபசரிக்கிறார். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு மகரவிளக்கு அன்றும் சபரிமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
தனது தவத்தை நிறுத்திய ஐயப்பன் தன்னைக் காணவரும்ம் பக்தர்களுக்கு திருவருள் பாலிக்க்கிறார். இந்நாளையே மகரசங்ராந்தி என்று சபரிமலையில் கொண்டாட்டுகிறார்கள். இச்சமயம் இலட்சக் கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்து விடுவதால் சபரிமலையே ஸ்தம்பித்து விடுகிரது. ஐயப்பசாமி அன்று மகரஜோதி வடிவில் காட்டி தந்து த்ருவருள் பாலிக்கிறார்.