வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

குளிர்க்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்தை போக்கும் அழகு குறிப்புகள்!!

1. தழும்புகளை நீக்க: பெரும்பாலானோருக்கு முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கும். இது அவர்களில் முக அழகை கெடுத்து விடும். அந்த  வகையில் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கி முகத்தை பளிச்சிட உருளை கிழங்கு ஃபேசியல் சரி செய்கிறது.
தேவையானவை:
 
உருளை கிழங்கு சாறு 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், முல்தானி மட்டி 2 டீஸ்பூன்.
 
செய்முறை:
 
முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க, முதலில் உருளைக்கிழங்கை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அவற்றுடன்  எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஃபேசியலை முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில பூசி  வந்தால் தழும்புகள் மறையும்
 
2. வறண்ட சருமத்திற்கு:
 
முகம் மிகவும் வறண்டு இருந்தால் கீறல்கள், சொரசொரப்புகள் ஏற்படும். இதனால் முக அழகே கெட்டு விடும். முகத்தை கீறல்கள் இல்லாமல்  வைத்து கொள்ள இந்த குறிப்பு போதும். மேலும், இது முகத்தின் வறட்சியை முழுமையாக போக்கி விடும்.
 
தேவையானவை: உருளைக்கிழங்கு, தயிர் 1 டீஸ்பூன்
 
செய்முறை:
 
முகத்தில் உள்ள வறட்சி நீங்க முதலில், தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் உருளைக்கிழங்கை சாறாக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும்.  இந்த ஃபேசியல் முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கிவிடும்.