1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பெண்களின் சருமத்துக்கு பொலிவை தந்து பாதுகாக்கும் கிருணிப்பழம்!

கிருணிப்பழம் பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யம் தானே. கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

 
தோலில் உள்ள எண்ணெய் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவினால் தோல் மிருதுவாகும்.
 
கிருணிப்பழ விதையைக் காய வைத்த பவுடர் 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
 
ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தை தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிருணி விதை, தலைமுடிக்கு  நல்ல கண்டிஷனராக செயல்படும்.
 
சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
 
நூறு கிராம் கிருணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலைக்குத்  தேய்த்து குளித்து வர, தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.