1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். 

* சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
 
* முகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில ஆயுர்வேத வழிகள் உள்ளன. இவற்றை தினமும் பின்பற்றினால், 15 நாட்களில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
 
* திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும். 
 
* தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகத்தில் உள்ள பருக்களை சீக்கிரம் போக்கலாம்.
 
* ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை வருவதையும் தடுக்கலாம்.
 
* தினமும் அதிகப்படியான அளவு நீரைக் குடித்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ளுங்கள்.
 
* வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.